‘பாகுபலி’ 2ம் பாகம் பற்றி என்ன சொல்கிறார் ராஜமௌலி?

‘பாகுபலி’ 2ம் பாகம் பற்றி என்ன சொல்கிறார் ராஜமௌலி?

செய்திகள் 13-Oct-2015 5:31 PM IST Chandru கருத்துக்கள்

‘‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’’ என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடையளிக்கவிருக்கும் ‘பாகுபலி’யின் 2ம் பாகம் குறித்து இதுவரை எந்த தகவலையும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடாமல் இருந்தார். கிட்டத்தட்ட ‘பாகுபலி’ திரைப்படம் 100வது நாளை எட்டவிருக்கும் சூழ்நிலையில், 2ம் பாகம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2ம் பாகத்திற்கான செட்டை எப்படி அமைப்பது என்பது குறித்து கலை இயக்குனர் சாபுசிரிலுடனும், அதனை கிராபிக்ஸில் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ‘மகுட்டா விஎஃப்எக்ஸ் சூப்பர்வைசர்’ பீட் ட்ராப்பருடனும் ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கலந்துரையாடினேன் என ராஜமௌலி குறிப்பிட்டிருக்கிறார். இந்த 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத், கேரளா, கர்நாடக காடுகள் ஆகிய இடங்களில் நடத்தவிருக்கிறார்கள். படம் 2016ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;