பத்து எண்றதுக்குள்ள... 1000க்கும் மேல...!

பத்து எண்றதுக்குள்ள... 1000க்கும் மேல...!

செய்திகள் 13-Oct-2015 4:15 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாருடன் இணைந்து தயாரிக்கும் நான்காவது படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. வருகின்ற 21ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வெளி வர உள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் விஜய் மில்டன். விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகிறது. தணிக்கை அதிகாரிகளிடம் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் உலகமெங்கும் 1000க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகவிருப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி தொலைக்காட்சி பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

உலகெங்கும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளி வர உள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகள் அடுத்த மாதம் வெளி வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;