‘டார்லிங்-2’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

‘டார்லிங்-2’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

செய்திகள் 13-Oct-2015 10:53 AM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை தொடர்ந்து ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிற படம் ‘டார்லிங்-2’. இப்படம் இம்மாதம் 21-ஆம் தேதி ரிலீசாவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு சில டெக்னிக்கல் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் தான் இந்த திடீர் ரிலீஸ் மாற்றம் என்று ‘டார்லிங்-2’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே ‘ஜின்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வந்த படமே இப்போது ‘டார்லிங்-2’வாக மாறியுள்ளது. ‘டார்லிங்-2’வில் ‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் காளி வெங்கட், அர்ஜுனன், ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோர் நடிக்க, சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;