அருள்நிதியின் ‘ஆறாது சினம்’

அருள்நிதியின் ‘ஆறாது சினம்’

செய்திகள் 13-Oct-2015 10:35 AM IST Chandru கருத்துக்கள்

‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அப்படத்தைத் தொடர்ந்து நகுல் நடிப்பில் ‘வல்லினம்’ படத்தை இயக்கினார். எடிட்டிங்கிற்கு தேசியவிருது வாங்கிய இப்படத்திற்குப் பிறகு, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘ஆறாது சினம்’ என டைட்டில் வைத்துள்ளனர். சமீபகாலமாக வெளி நிறுவனங்கள் தயாரித்த படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை மட்டும் வாங்கி வெளியிட்டு வந்த தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை நேரடியாக தயாரிப்பதால் படம்மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘மெமரிஸ்’ த்ரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘ஆறாது சினம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;