விஜய்சேதுபதி படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட்!

விஜய்சேதுபதி படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 13-Oct-2015 10:23 AM IST VRC கருத்துக்கள்

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் நேற்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றது. விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்து, அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விஜய்சேதுபதி, நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மதுரை, சேலம் விநியோக உரிமையை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்பு செழியன் கைபற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;