அஜித்தின் ‘வேதாளம்’ - இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அஜித்தின் ‘வேதாளம்’ - இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செய்திகள் 12-Oct-2015 4:52 PM IST VRC கருத்துக்கள்

அஜித்தின் ‘வேதாளம்’ பட டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது. இப்படத்தில் ‘வீரம்’ சிவா மற்றும் அஜித்துடன் முதன் முதலாக இணைந்திருக்கும் அனிருத், இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ’ஹிட்’டாக்க வேண்டும் என்று தனி சிரத்தை எடுத்து பாடல்களை உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு இதோ ஒரு இனிப்பான செய்தி! ‘வேதாளம்’ படப் பாடல்கள் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசை அமைத்த ஒரு படத்தின் பாடல்கள் அவரது பிறந்த நாளில் வெளியாவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கும் ‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ‘ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் சிவாவும், அஜித்தும் இணைந்து உருவாக்கியுள்ள இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;