தமிழக அரசுக்கு 'கத்துக்குட்டி' படக்குழுவினர் நன்றி!

தமிழக அரசுக்கு 'கத்துக்குட்டி'  படக்குழுவினர் நன்றி!

செய்திகள் 12-Oct-2015 3:56 PM IST Top 10 கருத்துக்கள்

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி 'கத்துக்குட்டி' படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது:

‘‘தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எங்களுடைய 'கத்துக்குட்டி' படம். 691 சதுர கி.மீ. விவசாய நிலத்தைக் காவு வாங்கி, வாழவாதாரத்தையே நிர்மூலமாக்கக்கூடிய மீத்தேன் திட்டத்தை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளும் தடை செய்திருக்கும் நிலையில், தஞ்சை மண்ணில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவர அதிகார வர்க்கம் துடிப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் 'கத்துக்குட்டி' படம் விளக்கியது. வாழ்வாதாரங்களும், பாரம்பரியப் பெருமைகளும் மீத்தேன் திட்டத்தால் அழிந்துபோகும் அபாயத்தை கிராஃபிக்ஸ் காட்சிகளால் 'கத்துக்குட்டி' படத்தில் சொல்லியிருந்தோம். கடந்த 9-ம் தேதி வெளியான 'கத்துக்குட்டி' படம், தமிழகம் முழுக்க மீத்தேன் குறித்த விழிப்பு உணர்வையும், விவசாயத்தைக் காக்கும் போராட்டத்தையும் மக்களிடத்தில் பெரிதாக ஏற்படுத்தியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமாகத் தொடங்கின. அரசு ஊழியர்களும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பது விவசாய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எங்கள் 'கத்துக்குட்டி' படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீத்தேன் திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து மக்களின் மனசாட்சியாக நின்று அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 'கத்துக்குட்டி' படக்குழு ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;