கமலின் அடுத்த படம்?

கமலின் அடுத்த படம்?

செய்திகள் 12-Oct-2015 3:38 PM IST VRC கருத்துக்கள்

‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படத்தைப் போலவே இப்படமும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது. 26 வருடங்களுக்கு முன் அதாவது, 1989-ல் கமல்ஹாசன் நடிப்பில் ராஜீவ்குமார் இயக்கிய மலையாள படம் ‘சாணக்கியன்’. இப்படத்தில் கமல்ஹாசனுடன், ஊர்மிளா மதோங்கர், ஜெயராம், திலகன் முதலானோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழகத்திலும் கூட இப்படம் நிறைய நாட்கள் ஓடியது! அந்த படத்தை தொடர்ந்து, அதாவது 26 வருடஙக்ளுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், டி.கே.ராஜீவ்குமாரும் கூட்டணி அமைக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்போடு படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது. இந்த தகவலை பிரபல மலையாள இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;