இந்த வாரம் 8 படங்கள்!

இந்த வாரம் 8 படங்கள்!

செய்திகள் 12-Oct-2015 1:48 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில வாரங்களாக மூன்று, நான்கு என்ற கணக்கில் திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் இந்த வாரம் வெள்ளிக் கிழமை (அக்டோபர்-16) எட்டு படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் முதல் இடத்தில் இருக்கும் படம் அனுஷ்கா நடித்துள்ள ‘ருத்ரமாதேவி’. ‘பாகுபலி’ படத்தை போன்று ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் சென்ற 9-ஆம் தேதி வெளியாகி விட்டது! இப்படத்தை தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறது ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம். வரிசையாக பல வெற்றிப் படங்களை ரிலீஸ் செய்த இந்நிறுவனம் ‘ருத்ரமாதேவி’யை பெரிய அளவில் ரிலீஸ் செய்யவிருக்கிறது. கிராஃபிக்ஸ், 3டி தொழில்நுட்பம் என பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ருத்ரமாதேவி’யுடன் ரிலீஸ் களத்தில் குதிக்கிற மற்ற படங்களின் விவரம் வருமாறு:

தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வாரம் ரிலீசாகவிருக்கிறது ‘சிவப்பு’. ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்கிரண், ரூபாமஞ்சரி முதலானோர் நடித்துள்ளனர். ஈழம் சம்பந்தப்பட்ட கதை ‘சிவப்பு’ என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக முழுக்க முழுக்க கல்லூரி மணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ‘மய்யம்’ என்ற படம், மன்சூரலிகான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து, கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள ‘அதிரடி’ (இயக்கம் – பாலு ஆனந்த்), எஸ்.பி.ஞானமொழி இயக்கத்தில் தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ‘திரைப்பட நகரம்’, வி.எஸ்.பிரபா இயக்கித்தில் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள ‘விரைவில் இசை’, புதுமுகங்கள் நடிப்பில் கே.எஸ்.முத்துமனோகரன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ‘மரப்பாச்சி’, ராம்சரண் நடித்து, சீனு வைட்லா இயக்கி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள ‘ப்ரூஸ்லீ-2’ என 8 படங்கள் ரிலீசாவதாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிறது. இப்படி 16-ஆம் தேதி ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும், இதில் சில படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அப்படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;