விக்ரம் படத்துடன் மோதும் விஜய்சேதுபதி படம்!

விக்ரம் படத்துடன் மோதும் விஜய்சேதுபதி படம்!

செய்திகள் 12-Oct-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நானும் ரௌடிதான்’. ‘போடா போடி’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத், தனுஷ் என பெரும் கூட்டணி அமைத்துள்ள இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினம் தான் விக்ரம், விஜய் மில்டன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘10 எண்றதுக்குள்ள’ படமும் ரிலீசாகவிருக்கிறது. அத்துடன் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தையும் அன்றைய தினம் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ‘ரஜினி முருகன்’ பட குழுவினர் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;