தமிழ் திரையுலகை துயரத்தில் ஆழ்த்திய 'ஆச்சி'

தமிழ் திரையுலகை துயரத்தில் ஆழ்த்திய 'ஆச்சி'

செய்திகள் 11-Oct-2015 1:46 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா நேற்று இரவு காலமானார். கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார் மனோரமா. பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. மறைந்த மனோரமாவிற்கு வயது 78. இவர் பிறந்த ஊர் மன்னார்குடி. சினிமாவிற்கு வந்த பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் வசித்து வந்தார். அவருக்கு பூபதி என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார்.

மனோரமா இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ் பெற்ற நடிகை ஆவார்! தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி. ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர்! தமிழ் சினிமாவில் இவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது! சுமார் 5000- த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசின் ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலாசாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார் மனோரமா! இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;