கொண்டாட்டத்தில் இணைந்த ராஜமௌலி, வடிவேலு!

கொண்டாட்டத்தில் இணைந்த ராஜமௌலி, வடிவேலு!

செய்திகள் 10-Oct-2015 2:55 PM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த திரைப்படமாகி விட்டது ராஜமௌலியின் ’பாகுபலி’. ஏற்கெனவே பல ஹிட் படங்களை வழங்கியுள்ள ராஜமௌலியின் ‘பாகுபலி’ இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கூட பலரை திரும்பி பார்க்க வைத்த படமாகும். இந்த படம் மூலம் ராஜமௌலி இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராகி விட்டார்! அப்படிப்பட்ட ராஜமௌலி பிறந்த நாள் இன்று! ‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றியுடன் இன்று பிறந்த நாள் காணும் ராஜமௌலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜமௌலியுடன் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபலமும் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் நமது வைகைப்புயல் வடிவேலு! தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களை எடுத்துக் கொண்டால் அதில் வைகைப்புயல் வடிவேலுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு! காமெடியில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு பல படங்களின் மூலம் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலுக்கும் ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;