‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா புதிய முயற்சி!

‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா புதிய முயற்சி!

செய்திகள் 10-Oct-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘மாயா’வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரை இரவல் குரலில் நடித்து வந்த நயன்தாரா, நானும் ரௌடி’க்காக சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். நயன்தாரா தமிழில் டப்பிங் பேசும் முதல் படம் ‘நானும் ரௌடிதான்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், “ThankU to my amazing Heroine #Nayanthara for takin the effort to Dub wit her own voice fr the first time #Respect” என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம், நயன்தாரா சொந்த குரலில் பேசியுள்ள படம், தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் படம், அனிருத் இசை அமைக்கும் படம் என பல சிறப்புக்களுடன் உருவாகி வரும் இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;