புதிய சரித்திரம் படைத்த அஜித்தின் ‘வேதாளம்’

புதிய சரித்திரம் படைத்த அஜித்தின் ‘வேதாளம்’

கட்டுரை 10-Oct-2015 10:52 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு முறை அஜித் பட டீஸர்/டிரைலர் ரிலீஸாகும் போதும் ஏதாவது ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் தல ரசிகர்கள். இந்த முறை வெளிவந்திருக்கும் ‘வேதாளம்’ டீஸரையும் பல புதிய சாதனைகளை படைக்க வைத்திருக்கிறார்கள். ‘வேதாளம்’ டீஸர் படைத்திருக்கும் சாதனைகளைப் பற்றிய சில புள்ளி விவரங்கள்...

* வேதாளம் டீஸர் வெளியான முதல் 1 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 48 ஆயிரம் லைக்குகளையும் பெற்றது. இந்திய அளவில் எந்த ஒரு வீடியோவும் ஒரு மணி நேரத்தில் இவ்வளவு லைக்குகளை வாங்கியதில்லை. அதோடு உலகளவிலும் இதை ஒரு புதிய சாதனை என்றே கூறுகிறார்கள்.

* மிக விரைவாக 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற 2வது தென்னிந்திய டீஸர் என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறது வேதாளம். ஷங்கரின் ‘ஐ’ டீஸர் 15 மணி நேரத்திற்கும் குறைவாக இந்த சாதனையைச் செய்ய, அஜித்தின் வேதாளம் 17 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

* இந்திய அளவில் அதிவிரைவில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் வீடியோ என்ற சாதனையையும் படைத்திருக்கிறது வேதாளம். டீஸர் வெளியான 18 மணி நேரத்தில் இந்த சாதனையைப் படைத்திருக்கிறது வேதாளம் டீஸர். இது ஒரு புதிய சாதனை!

* இந்திய அளவில் அதிக லைக்குகளை வாங்கிய டிரைலாக இருந்த ‘புலி’ சாதனையை முறியடித்து முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது அஜித்தின் ‘வேதாளம்’ டீஸர். புலி டீஸரின் ஒரு லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை முறியடித்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறது வேதாளம். அதுவும் 2 நாட்களுக்குள்ளாகவே!

* 20 லட்சம் பார்வையாளர்களை அதிவிரைவில் கடந்த 2வது டீஸர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது அஜித்தின் ‘வேதாளம்’. ஷங்கரின் ‘ஐ’ டீஸர் 36 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து முதலிடத்தில் இருக்கிறது. வேதாளம் டீஸர் 40 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இன்னும் பல சாதனைகளை இந்த ‘வேதாளம்’ டீஸர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;