ஆடியோ விழாவில் கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்

ஆடியோ விழாவில் கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்

செய்திகள் 10-Oct-2015 10:09 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீகிருஷ்ணா டாக்கீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. இப்படத்தை மோகன்.ஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படத்தின் நாயகன் பிரஜன்,

‘‘இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டு அவர்களை விழாவுக்கு அழைத்தோம். ஆனால் யாரும் விழாவுக்கு வரவில்லை. நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் இப்படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல்களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம்! ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது’’ என்று கண்ணீர் விட்டு அழுதார்! தொடர்ந்தவர்,

‘‘எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தினார்கள்.
தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைமுறை படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;