தனுஷ் படம் முடிந்தது - விரைவில் டைட்டில் அறிவிப்பு!

தனுஷ் படம் முடிந்தது - விரைவில் டைட்டில் அறிவிப்பு!

செய்திகள் 9-Oct-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதே டீம் உருவாக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்படம் அப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், ‘விஐபி’ படத்தின் கதைக்கும் இப்படதிதின் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் சமீபத்தில் தனுஷ் தெளிவுப்படுத்தியிருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ள ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்டி லுக் விரைவில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான தனுஷ் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;