‘தோழா’ - சில சுவாரஸ்யத் தகவல்கள்

‘தோழா’ - சில சுவாரஸ்யத் தகவல்கள்

செய்திகள் 8-Oct-2015 5:42 PM IST Chandru கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் இங்கே தமிழில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள். தெலுங்கில் கார்த்திக்கென தனி மார்க்கெட் இருந்தாலும் இதுவரை நேரடி தெலுங்கு படத்தில் அவர் நடித்ததில்லை. முதன்முறையாக நாகார்ஜுனாவுடன் இணைந்து நேரடி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் உருவாக்கப்படுகிறது. தமிழில் இப்படத்திற்கு ‘தோழா’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்கள்...

* 2011ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி, தெலுங்கில் ‘ஊப்பிரி’ என்ற பெயரிலும் தமிழில் ‘தோழா’ என்ற பெயரிலும் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

* நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, அலி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறாராம்.

* பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் வம்சி பைடிபல்லி. பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்க, எடிட்டிங் பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார் கே.எல்.பிரவீன்.

* இப்படத்திற்காக பிரான்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சில முக்கிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ‘தி இன்டச்சபிள்’ படத்தின் ரீமேக் என்பதால்தான் இதுபோன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த பிரான்ஸ் அரசு அனுமதி கொடுத்திருக்கிறதாம்.

* இப்படத்தில் மல்டி மில்லியனராக நடிக்கும் நாகார்ஜுனாவுக்கு முடக்குவாத நோயால் வீல்சேரில் வாழ்க்கை நடத்தும்படியான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அவரின் கேரக்டர் பெயர் விக்ரம். நாகார்ஜுனாவை கவனிக்கும் ‘கேர் டேக்கர்’ கேரக்டர் கார்த்திக்கு. நாகார்ஜுனாவின் செகரட்டரியாக நடித்திருப்பவர் தமன்னா.

* ‘குக்கூ’ இயக்குனர் ராஜு முருகன் தமிழ் ‘தோழா’வுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

* செப்டம்பர் 18ஆம் தேதி ‘தோழா’, ‘ஊப்பிரி’ படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இறுதிக்கட்ட பணிகளிலிருக்கும் இப்படங்களின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தோழா - டிரைலர்


;