‘புலி’ சாதனையை அசால்ட்டாக முறியடித்த ‘வேதாளம்’

‘புலி’ சாதனையை அசால்ட்டாக முறியடித்த ‘வேதாளம்’

செய்திகள் 8-Oct-2015 4:32 PM IST Chandru கருத்துக்கள்

‘சாதனை என்பதே முறியடிப்பதற்காக படைக்கப்படுவதுதான்’ என்பது பொதுமொழி. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ விஜய், அஜித் ரசிகர்களுக்கு சமீபகாலமாக சரியாகப் பொருந்துகிறது. ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளிவந்தபோது அதற்கு முந்தைய விஜய் பட டீஸர்/டிரைலர் சாதனைகள் அனைத்தையும் அது முறியடித்தது. குறிப்பாக 22 மணி நேரத்திலேயே அந்த டீஸர் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. அதோடு ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் சல்மான் கானின் ‘கிக்’ படத்திற்குப் பிறகு அதிகபட்ச ‘லைக்’குகளை வாங்கிய டீஸர் என்ற பெருமையை ‘என்னை அறிந்தால்’ பெற்றது.

இந்த சாதனையை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் ‘புலி’ டீஸர் வெளிவந்தபோது யு டியூப்பில் அதிரடியாக களம்புகுந்தனர். இதனால் புலி டீஸர் வெளியான 21 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதித்தது. அதோடு 4 நாட்களுக்குள் 30 லட்சம் பார்வையாளர்களையும், 44 ஆயிரம் லைக்குகளையும் பெற்றது. டீஸருக்குப் பிறகு வெளியான புலி டிரைலர், இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்றிருந்த ‘கிக்’ பட டிரைலர் சாதனையை முறியடித்து 1 லட்சத்து 10 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் வாங்கியதும் இன்னொரு சாதனை.

என்னை அறிந்தால் சாதனையை புலி முறியடித்ததால், ‘வேதாளம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என தல ரசிகர்கள் அமைதி காத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரமும் வந்துவிட்டது... நேற்றிரவு வெளியான ‘வேதாளம்’ பட டீஸர் 1 மணி நேரத்திலேயே 4 லட்சம் பார்வையாளர்களையும், 48 ஆயிரம் லைக்குகளையும் வாங்கிக் குவித்தது. அதோடு, தற்போது 17 மணி நேரம் ஆகியிருக்கும் நிலையில் ‘வேதாளம்’ டீஸர் 10 லட்சம் பார்வையாளர்களை எட்டியிருப்பதோடு, 95 ஆயிரம் லைக்குகளையும் வாங்கியிருக்கிறது. புலி சாதனையை மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அதிவேக லைக்குகளை வாங்கிய டீஸர் என்ற சாதனையையும் புதிதாக படைத்திருக்கிறது வேதாளம். அனேகமாக 24 மணி நேரத்திற்குள்ளாகவே புலியின் இன்னொரு சாதனையான இந்திய அளவில் அதிக லைக்குகளை வாங்கிய டிரைலர் என்பதையும் ‘வேதாளம்’ டீஸர் தட்டிப்பறிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ‘புலி’ டிரைலரை அஜித் ரசிகர்கள் அதிகமாக டிஸ்லைக் செய்து புதிதாக ஒரு சாதனையை உருவாக்கினார்கள். அதை இப்போது ‘வேதாளம்’ டீஸருக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 17 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற்றிருக்கிறது வேதாளம் டீஸர்.

இனி... ‘வேதாளம்’ பட டிரைலருக்காக இருதரப்பு ரசிகர்களுமே வெயிட்டிங்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;