‘பத்து எண்றத்துக்குள்ள’ சென்சார் சர்டிஃபிக்கெட்?

‘பத்து எண்றத்துக்குள்ள’ சென்சார் சர்டிஃபிக்கெட்?

செய்திகள் 8-Oct-2015 3:29 PM IST VRC கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதை தொடர்ந்து இப்படம் சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம், சூப்பர் ஹிட்டான ‘கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கியுள்ள படம், விக்ரம், சமந்தா முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் என பல ஸ்பெஷல்களுடன் வரவிருக்கும் இப்படம் ரசிகரக்ளின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த படம் ஆயுதபுஜையை முன்னிட்டு இம்மாதம் 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;