வேதாளம் - டீஸர் விமர்சனம்

வேதாளம் - டீஸர் விமர்சனம்

கட்டுரை 8-Oct-2015 10:00 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொருமுறை அஜித் பட டீஸர், டிரைலர் ரிலீஸாகும்போதும் ‘தல’ ரசிகர்களுக்கு அன்றைய தினம் சிவராத்திரியாகவே முடியும். நேற்று இரவு 12.01 மணிக்கு வெளியான ‘வேதாளம்’ பட டீஸருக்கும் காத்திருந்து தங்களது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் கொட்டித் தீர்த்துவிட்டனர் அஜித் ரசிகர்கள். டீஸர் வெளியான 1 மணி நேரத்திலேயே 4 லட்சம் பார்வையாளர்களையும், 48 ஆயிரம் லைக்குகளையும் பெற்றது. நிச்சயம் இந்திய சினிமாவில் இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். சாதனைகள் ஒருபுறமிருக்கட்டும்... உண்மையில் ‘வேதாளம்’ டீஸர் எப்படியிருக்கிறது?

இயக்குனர் சிவாவிடமிருந்து இப்படி ஒரு டீஸர் வருமென்று... யாருமே நினைத்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். நிச்சயம் இது ஒரு ஆச்சரியமான முயற்சிதான். அஜித்திற்கு ‘நெகட்டிவ் ஷேடு’ என்பது புதிதல்ல! வாலி, மங்காத்தா, ஆரம்பத்தின் முதல்பாதி என ஏற்கெனவே நிறைய பார்த்தாகிவிட்டது. ஆனால், அதையும் தாண்டி இப்படத்தில் வேறொரு கோணத்தில் அஜித்தின் கோர முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர் சிவா. ‘கண்ணாமூச்சி ரே ரே... கண்டுபிடி யாரு’ என்ற குழந்தைகளுக்கான பாடலை இதுபோன்றதொரு மாடுலேடுஷனில், இத்தனை கொடூரமாக இதுவரை யாருமே கேட்டிருக்க மாட்டார்கள். ரத்தம் தெறிக்கும் அஜித்தின் குளோசப் உதடுகளிலிருந்து இந்த வார்த்தை வெளிவருவதைப் பார்க்கும் எவருக்கும் சிலிர்க்கவே செய்யும். ‘தல’யின் இந்த கேரக்டர் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்பதைக் காண்பதற்காகவே ‘வேதாளம்’ படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தல ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே ‘அவன் ஓடி ஒழியுற ஆள் இல்ல... தேடி அடிக்கிற ஆள்’ என்ற டயலாக்கை டீஸரின் இடையே ஓடவிட்டிருக்கிறார்கள். குளோசப் காட்சிகள், ஷார்ப் ‘கட்’கள், ஸ்டைலிஷ் பிஜிஎம் என்பன போன்ற விஷயங்கள் டெக்னிக்கலாக இப்படம் பேசப்பட நிறைய வாய்ப்பிருப்பதை இந்த டீஸர் பறைசாற்றியிருக்கிறது.

இந்த டீஸரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். எனவே பொதுவான ரசிகர்களிடம் இந்த டீஸருக்கு வெவ்வேறான வரவேற்புகள் கிடைக்கலாம். தவிர, சென்டிமென்ட், காதல், காமெடி போன்றவற்றைத் தாங்கிவரும் டிரைலருக்குப் பிறகுதான் ‘வேதாளம்’ படம் எப்படியிருக்கும் என்பதையும் ஓரளவுக்கு நம்மால் யூகிக்க முடியும். தீபாவளிக்கு ரிலீஸாவதை இந்த டீஸரில் உறுதிப்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

மொத்தத்தில்.... தல ரசிகர்களுக்காகவே ‘வேதாளம்’ டீஸர் யு டியூப்பில் தெறிக்கவிடப்பட்டிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;