மகேஷ் பாபுவை தொடர்ந்து ராம் சரண்!

மகேஷ் பாபுவை தொடர்ந்து ராம் சரண்!

செய்திகள் 7-Oct-2015 3:23 PM IST VRC கருத்துக்கள்

மகேஷ்பாபு நடித்த ‘செல்வந்தன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் சென்னை வந்தார். இதனை தொடர்ந்து தற்போது ராம்சரண் நடித்திருக்கும் ‘புருஸ்லீ – 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ராம்சரணும் சென்னை வர இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 16-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி ரகுல்பிரீதி சிங், நதியா, சம்பத் மற்றும் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் என ‘புருஸ்லீ-2’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்து வெளியிடுபவர் ‘பத்ரகாளி ஃபிலிம்ஸ்’ பத்ரகாளி பிரசாத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;