நடிகர் சங்கத்தை ஒன்றிணைக்கும் முயற்சி!

நடிகர் சங்கத்தை ஒன்றிணைக்கும் முயற்சி!

செய்திகள் 7-Oct-2015 2:05 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சங்கத்திற்கு வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இரண்டு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடிகர் சங்கம் இரண்டு அணிகளாக பிரிந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் இரு அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவை! இது சம்பந்தமாக அந்த சங்கங்கள் சார்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு”

‘‘காலம் சென்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அன்றைய காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர் - நடிகையரால் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த சங்கம் தான் தென்னிந்திய நடிகர் சங்கம்! அந்த சங்கத்திற்கு எப்பொழுது தேர்தல் வந்தாலும் அமைதியாக நடைபெற்று தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகொடுத்து கட்டிப்பிடித்து அன்பை பறிமாறி கொள்வார்கள். சக சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவையுடன் இணக்கமாக நட்புறவு பாராட்டி வருவது நடிகர் சங்கம்தான்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் என்றவுடன் இப்போது அனைவரின் பார்வையும், கவனமும் நடிகர் சங்கத்தின் மீது விழுந்துள்ளது. தேர்தலை தவிர்த்து சுமுகமாக முடிவு எடுக்கவும், இரு அணி சார்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் அறிக்கைப் போர், பேட்டிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என இந்த கூட்டறிக்கை வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
‘ஊரு ரெண்டுபட்டல் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்று பழைய பழமொழி உள்ளது. ஆனால் இன்று கூத்தாடி ரெண்டுபட்டதால் ஊருக்கு திண்டாட்டமாய் உள்ளது.

திரையில் தோன்றி மக்களை பரவசப்படுத்தும் நடிகர்கள், அவர்களை பின்பற்றும் ரசிகர்கள், பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் நடிகர் சங்க தேர்தலை கண்காணித்து வருகிறார்காள். இரு அணிகளிலும் போட்டியிடும் அனைவருமே எங்களுக்கு நண்பர்கள்தான்.

நடைபெற இருக்கிற நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகளுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரையும் சாராத பொதுவான திரை கலைஞர்களும் இதே கவலையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆகவே எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியை தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய சங்கங்கள் ஈடுபட்டுள்ளது. ஆகவே வரும் சனிக்கிழமை (10-10-15) அன்று இரு அணியினரையும் அழைத்து பேசி ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட இந்த சங்கங்களின் சார்பில் ஒரு கூட்டுக் குழு முயற்சிக்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;