60 நாட்களில் இரண்டு படத்தை முடித்த கமல்!

60 நாட்களில் இரண்டு படத்தை முடித்த கமல்!

செய்திகள் 7-Oct-2015 11:17 AM IST Chandru கருத்துக்கள்

கமலிடம் ஒரு பழக்கம் உண்டு. பொறுமையாகவும், வித்தியாசமாகவும் ஒரு படம், விரைவாகவும் காமெடியாகவும் ஒரு படம் என மாறி, மாறி தன் படங்களைச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். ஹேராமுக்குப் பிறகு தெனாலி, ஆளவந்தானுக்குப் பிறகு பம்மல் கே.சம்பந்தம், அன்பேசிவம், விருமாண்டிக்குப் பிறகு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். போன்ற படங்களெல்லாம் இப்படி உருவானவைதான். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்குப் இதற்குப் பிறகு எந்த முழுநீள காமெடிப் படத்திலும் கமல் நடிக்கவில்லை. அதனாலேயே அவரால் வருடத்திற்கு ஒரு படத்தை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால் கமல் ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த வருடம் மட்டுமே ஏற்கெனவே உத்தமவில்லன், பாபநாசம் என இரண்டு படங்கள் ரிலீஸாகிவிட்டன. வரும் தீபாவளிக்கு அவரின் அடுத்த படமான ‘தூங்கவனமு’ம் ரிலீஸாகவிருக்கிறது.

தமிழ் மட்டுமின்றி ‘தூங்காவனம்’ படம் தெலுங்கிலும் ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பையும் மொத்தம் 52 நாட்களிலேயே முடித்துவிட்டார்கள். ஆனால், சிற்சில ‘பேட்ஜ்ஒர்க்’ காட்சிகளுக்காக மீண்டும் 8 நாட்கள் படமாக்கப்பட வேண்டியிருந்ததால் மொத்தம் 60 நாட்களில் 2 படங்களை முடித்து அசத்தியிருக்கிறார் கமல்ஹாசன். இத்தனைக்கும் ‘தூங்காவனம்’ படம் காமெடிப் படமெல்ல. முழுநீள ஆக்ஷன் படம். அதிலும் ஹாலிவுட் ஸ்டைலில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம்.

ஹேட்ஸ் ஆஃப் டு உலகநாயகன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;