நயன்தாராவைத் தொடர்ந்து விசாகா சிங்!

நயன்தாராவைத் தொடர்ந்து விசாகா சிங்!

செய்திகள் 7-Oct-2015 10:00 AM IST Chandru கருத்துக்கள்

‘பிடிச்சிருக்கு’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விசாகா சிங்கிற்கு சந்தானத்துடன் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்தார். விரைவில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாலிபராஜா’ திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. தற்போது அறிமுக இயக்குனர் மணிசர்மா இயக்கும் புதிய ஹாரர் படமொன்றில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விசாகா சிங்.

நயன்தாராவின் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாயா’ படம்போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வரும் இப்படத்திற்கு ‘பயம் ஒரு பயணம்’ எனப் பெயரிட்டுள்ளனர். முழுக்க முழுக்க மூணாறிலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ‘லட்டு’ நாயகியாக ரசிகர் நெஞ்சங்களைக் கவர்ந்த விசாகா சிங், இப்படத்தில் பேயாக வந்து ரசிகர்களை பயத்தில் உறைய வைக்கப்போகிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;