‘‘இப்படி பண்ணிட்டாங்களே...!’’ - விஜய் வேதனை

‘‘இப்படி பண்ணிட்டாங்களே...!’’ - விஜய் வேதனை

செய்திகள் 6-Oct-2015 4:58 PM IST Chandru கருத்துக்கள்

‘புலி’ பட ரிலீஸுக்கு முன்பு, திடீரென விஜய், சமந்தா, நயன்தாரா, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரின் அலுவலங்கள், வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள். ரெய்டின்போது என்ன நடந்தது? என்னென்ன ஆவணங்கள் சிக்கின? வரி ஏய்ப்பு ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது ரெய்டில் சிக்கிய பிரபலங்களோ எதுவுமே கருத்து தெரிவிக்காத நிலையில், சில மீடியாக்கள், நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக வரி ஏய்ப்பு செய்துள்ளது ரெய்டின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை மறுத்து தற்போது நடிகர் விஜய்யே அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தான் இதுவரை சரியாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும், முறையாக கணக்கு வழக்குகளை கடைபிடித்து வருவதாகவும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு ‘‘என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் உண்மைப்புறம்பான செய்திகளை வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்!’’ என்றும் நடிகர் விஜய் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;