புதியவர்களின் புதிய முயற்சி ‘அந்தாதி’

புதியவர்களின் புதிய முயற்சி ‘அந்தாதி’

செய்திகள் 6-Oct-2015 3:59 PM IST VRC கருத்துக்கள்

அர்ஜுன் விஜயராகவன், அஞ்சனா கீர்த்தி, சாகித்ய ஜெகந்நாதன், கார்த்திக் நாகராஜன், பார்கவ் சக்ரவர்த்தி ஆகிய புதுமுகங்களுடன் ‘பூவிலங்கு’ மோகன், ‘நிழல்கள்’ ரவி, சேத்தன், மோகன்ராம், ‘நாதஸ்வரம்’ குமார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘அந்தாதி’. ‘டியூ ட்ராப்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட்ராமன் இயக்கியுள்ளார். அறிமுக இசை அமைப்பாளர் ஷமந்த் இசை அமைத்துள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இப்படம் நேற்று (5-10-15) பத்திரிகையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

போலீஸ் துறையில் சேர்ந்து, நேர்மையாக பணியாற்றி, நாட்டுக்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் ஒரு இளைஞனை பற்றிய கதை இப்படம். இந்த கதையை எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களையும் நம்பாமல், படத்தின் திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நம்பி இப்படத்தை மிகவும் யதார்த்தமான காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். இதற்காகவே இப்படக் குழுவினருக்கு ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்! படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோரும் புதுமுகங்கள் என்பதால் நாமும் இயல்பாகவே இப்படத்தின் கதைக்குள் ஐக்கியமாகி விடுகிறோம்! பாராட்ட வேண்டிய புதிய முயற்சி! இந்த படம் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;