விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு விஜய் உதவி!

விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு விஜய் உதவி!

செய்திகள் 6-Oct-2015 12:18 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘புலி’. இப்படம் வெளியான அன்று (1-10-15) சென்னை தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சௌந்தரராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த செய்தி விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் மிகவும் கவலையுற்றார்! இந்நிலையில் விஜய் இன்று (6-10-15) காலை 6 மணி அளவில் இறந்துபோன தனது ரசிகர்கள் இருவரது வீட்டிற்கும் நேரில் சென்று அவர்களது பெற்றோரிடம் ஆறுதல் கூறி, பண உதவிகளை வழங்கினார். மேலும் ‘உங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள், கண்டிப்பாக உதவ நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;