‘நாய்கள் ஜாக்கிரதை’ டீமிலிருந்து ஒரு இயக்குனர்!

‘நாய்கள் ஜாக்கிரதை’ டீமிலிருந்து ஒரு இயக்குனர்!

செய்திகள் 6-Oct-2015 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் இயக்குனர் சக்தி சௌந்தர ராஜனின் உதவியாளராக பணியாற்றிய ராம் மனோஜ்குமார் இயக்கி வரும் படம் ‘ஆத்யன்’. ‘ரத்தங் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ரஞ்சித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக நடிக்க, சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயசந்திரன், ஜெனீஷ், மகேஷ், அன்பு, ருத்ரு, ‘ஹைடி’ கார்த்திக், வினிதா, நிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ஆத்யன்’ படம் குறித்து இயக்குனர் ராம் மனோஜ்குமார் கூறும்போது, ‘‘ஆத்யன் என்றால் எல்லாம் அறிந்தவன்! வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த இவன் தன் காதலியை தேடி இந்தியா வருகிறான். இங்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக போதை மற்றும் கடத்தல் கும்பலுடன் சிக்கி விடுகிறான். எல்லாம் அறிந்த ஆத்யன் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறான், தன் காதலியை சதித்தானா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படமே ‘ஆத்யன்’’ என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை எம்.ஸ்ரீனிவாசன் கையாள, ஹரி ஜி.ராஜசேகர் இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் ரிலீசாகவிருக்கிறது ‘ஆத்யன்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;