ஒரே நேரத்தில் உருவாகும் மூன்று ‘புரூஸ் லீ’கள்!

ஒரே நேரத்தில் உருவாகும் மூன்று ‘புரூஸ் லீ’கள்!

செய்திகள் 6-Oct-2015 11:19 AM IST Top 10 கருத்துக்கள்

தலைப்புப் பிரச்சனை தலைவிரித்தாடும் தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலான படங்களுக்கு ஏற்கெனவே பழைய படங்களுக்கு வைக்கப்பட்ட தலைப்புகளையே மீண்டும் வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சில தலைப்புகள் 2வது முறையும், இன்னும் சில தலைப்புகள் 3வது முறையும் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒரே தலைப்பில் மூன்று மொழிகளில் படங்கள் உருவாகிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஆம்.. தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘புரூஸ் லீ’ என பெயர் சூட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர்.

தமிழ் புரூஸ் லீ வெளிவந்த சில நாட்களிலேயே தெலுங்கில் ராம்சரண், ராகுல் ப்ரீத் சிங், கீர்த்தி கர்பந்தா நடிக்கும் படத்திற்கும் ‘புரூஸ் லீ’ என பெயர் வைத்து, அதன் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அதோடு இப்படத்தை தமிழில் ‘புரூஸ் லீ&2’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதுபோதாதென்று தமிழ் ‘புரூஸ் லீ’யில் ஜி.வி.க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தாதான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த இரண்டு ‘புரூஸ் லீ’கள் போதாதென்று தன் பங்கிற்கு மூன்றாவதாக ஒரு ‘புரூஸ் லீ’யை பாலிவுட்டில் களமிறக்கியுள்ளார் ‘சர்ச்சை புகழ்’ இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாயகியை மையமாக வைத்து உருவாகிக் கொண்டிருக்கும் இந்த ஆக்ஷன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;