சிவாஜி கணேசன் படப்பாடல் வரியில் ஒரு படம்!

சிவாஜி கணேசன் படப்பாடல் வரியில் ஒரு படம்!

செய்திகள் 6-Oct-2015 10:56 AM IST VRC கருத்துக்கள்

எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன், ஆர். ரம்யா வழங்கும் ‘பி.ஜி.மீடியா ஒர்க்ஸ்’ பி.ஜி. முத்தையா இணை தயாரிப்பில் தயாராகி வரும் படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன. இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘ராஜா மந்திரி’. இந்த படத்தில் ‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் இடம்பெற்ற பாடல் வரியை தலைப்பாக கொண்டு உருவாகி வரும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்குனர் மோகன் ரஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கிறார்கள். ​ ​
இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ராம் மற்றும் நிறைய புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள்.

இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும் படம் தான் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’’ எகிறார் இப்படத்தை இயக்கும் ராகேஷ்.

இப்படத்தின் ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’,’உறுமீன்’ படத்தின்இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார். சென்னையைச் சுற்றியுள்ளபகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது “ மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;