பரத் படத்தில் த்ரிஷா?

பரத் படத்தில் த்ரிஷா?

செய்திகள் 6-Oct-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

மேஜிக் சேர் நிறுவன தயாரிப்பில், அரவிந்த் ஸ்ரீதர் இயக்கும் புதிய படம் ‘சிம்பா’. மிருகங்களை... குறிப்பாக நாய்களை நேசிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பரத் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பானு மெஹ்ரா நடிக்கிறார். 20 வகையான வித்தியாசமான நாய்களை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம். அதோடு நடிகர் பிரேம்ஜியையும் கிராபிக்ஸில் நாயாக மாற்றி நடிக்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்தின் சிறப்புத்தோற்றம் ஒன்றில் நடிக்க நடிகை த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். நிஜ வாழ்க்கையில் நாய்களை அளவுக்கதிமாக நேசிக்கும் த்ரிஷாவுக்கு இந்த ‘சிம்பா’விலும் அதேபோன்ற கதாபாத்திரம் என்பதால் கண்டிப்பாக நடிப்பதற்கு சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;