வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு மிஷ்கின் பாராட்டு!

வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு மிஷ்கின் பாராட்டு!

செய்திகள் 6-Oct-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் நகர திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு விருது பெற்றது. இதனையொட்டி வெற்றிமாறனுக்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இயக்குனர் மிஷ்கின் வெற்றிமாறனுக்கு பாராட்டு தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,

‘‘நீ கலையின் உச்சியை தொட்டுவிட்டாய்! உன் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்து விட்டாய்! பாலுமகேந்திரா மட்டும் இருந்திருந்தால் உன்னை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார். ஒரு கடுமையான, உண்மையான திரைப்படமே ‘விசாரணை’. மனிதம் என்பதனை இப்படம் எனக்கு உணர்த்தியது. இந்த படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்! இனி, உன்னையும் இதுபோன்ற படைப்புகளையும் மக்கள் பாராட்டுவார்கள்! நண்பா, உன் ‘விசாரனை’ திரைப்படம் ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;