அதிரடியாக ரூட்டை மாற்றும் ஜி.வி.பிரகாஷ்!

அதிரடியாக ரூட்டை மாற்றும் ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 6-Oct-2015 9:59 AM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளராக இருந்து ‘டார்லிங்’ மூலம் நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ்குமார் தனது 2வது படத்திலேயே அதிரடியாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ எனும் பிட்டுப்படத்தில் நடித்தார். விமர்சனரீதியாக இப்படம் பின்னடைவைச் சந்தித்தாலும் வசூல்ரீதியாக தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்தியது. அதோடு டீன்ஏஜ் இளைஞர்களின் கனவு நாயகனாகவும் பார்க்கப்பட்டார் ஜி.வி.. முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே வந்து பார்க்கும் வகையில் அமைந்த ‘ஏ’ சர்டிஃபிகேட் படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’விற்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற படத்தை அவரிடமிருந்து பலரும் எதிர்பார்க்க, அதிரடியாக தனது அடுத்த இரண்டு படங்களையும் வித்தியாசமாகத் தர முடிவு செய்திருக்கிறார் ஜி.வி..

தற்போது ‘கெட்ட பையன்டா கார்த்தி’, ‘புரூஸ் லீ’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் ‘கெட்ட பையன்டா கார்த்தி’ படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, வசனம் எழுதுகிறார் அட்லீ. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கும்பொருட்டு உருவாகிவரும் இப்படத்தின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸிடமிருந்து தனக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜி.வி. ‘யாரடி நீ மோகினி’ ஸ்டைலில் உருவாகும் இப்படத்தை ஜி.வி.யின் நண்பர்களான ஷங்கர் மற்றும் குணா இயக்குகிறார்கள்.

ஜி.வி. நடிக்கும் இன்னொரு படமான ‘புரூஸ் லீ’யை முழுக்க முழுக்க குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாக்கவிருக்கிறார்களாம். ரஜினியின் நடிப்பில் வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்திய ‘தில்லு முல்லு’ ஸ்டைலில் ஜி.வி.யின் ‘புரூஸ் லீ’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

(இந்த இரண்டு படங்கள் தவிர ஜி.வி. நடித்த ‘பென்சில்’ படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லென்ஸ் - டிரைலர்


;