அஜித்தின் ‘V’ சென்டிமென்ட் வெற்றிகள்!

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட் வெற்றிகள்!

செய்திகள் 5-Oct-2015 2:47 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் வெற்றியடைந்தால் அப்படத்தின் பல விஷயங்கள் சென்டிமென்ட்டாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்வது சினிமாவில் வாடிக்கை. உலகமெங்கிலும் இதுபோன்று நடக்கிறதுதான் என்றாலும், தமிழ்சினிமாவில் இந்த சென்டிமென்ட் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு சென்டிமென்ட் காரணமாக அஜித்தின் ‘வேதாளம்’ படம் சூப்பர்ஹிட்டாகும் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆம்... அஜித் நடிப்பில் இதுவரை வெளிவந்த எல்லா ‘V’ லெட்டர் படங்களும் வெற்றிபெற்றுள்ளதே ‘வேதாளம்’ படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதற்குக் காரணம். வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம் என இதுவரை 5 ‘V’ லெட்டர் படங்களில் நடித்துள்ளார் அஜித். இதில் வான்மதி, வீரம் ஹிட் வரிசையிலும், வாலி, வில்லன், வரலாறு ஆகியவை பிளாக்பஸ்டர் வெற்றியையும் பெற்றுள்ளன. இதனால் இதேபோன்ற சென்டிமென்ட் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வேதாளம்’ படத்திலும் ஒர்க்-அவுட்டாகும் என ‘தல’ ரசிகர்கள் பெரிதும் நம்பி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;