ஜப்பானிலும் கால்பதிக்கும் ‘பாகுபலி’

ஜப்பானிலும் கால்பதிக்கும் ‘பாகுபலி’

செய்திகள் 5-Oct-2015 1:50 PM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலியின் ‘பாகுபலி’ ஏராளமான சாதனைகள் படைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்! உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான இப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி’ படம் விரைவில் சீனாவிலும் ரிலீசாகவிருக்கிறது. ஆமீர்கான் நடித்த ‘பீகே’ திரைப்படத்தை சீனாவில் வாங்கி வெளியிட்ட ‘E-Star’ நிறுவனம் தான் ‘பாகுபலி’ படத்தையும் சீனாவில் வெளியிடுகிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ‘பாகுபலி’ குறித்து மற்றுமொரு புதிய செய்தி கிடைத்துள்ளது. உலக அளவில் பேசப்பட்டு வரும் ‘பாகுபலி’ படம் விரைவில் ஜப்பானிலும் கால் பதிக்கவிருக்கிறது. அதாவது சீனாவை தொடர்ந்து ‘பாகுபலி’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியாகவிருக்கிறது. ஜப்பானில் இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை ஜப்பானிலுள்ள ‘Twin Co’ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை ‘பாகுபலி’ பட இயக்குனர் ராஜமௌலியே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;