‘ருத்ரமாதேவி’யின் புதிய ரிலீஸ் ப்ளான்!

‘ருத்ரமாதேவி’யின் புதிய ரிலீஸ் ப்ளான்!

செய்திகள் 5-Oct-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

‘பாகுபலி’யைத் தொடர்ந்து, பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘ருத்ரமாதேவி’. இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, சுமன், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், நித்யா மேனன் உள்பட ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார். மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள ‘ருத்ரமாதேவி’ தெலுங்கு படத்தை வருகிற 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘ருத்ரமாதேவி’யின் தமிழ் வெர்ஷனை வெளியிடும் உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. தெலுங்கு, ‘ருத்ரமாதேவி’ வெளியாகும் அதே நாளில் அதாவது இம்மாம் 9-ஆம் தேதி தமிழ் ‘ருத்ரமாதேவி’யையும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்! ஆனால் இப்போது திடீர் திருப்பமாக தெலுங்கு ‘ருத்ரமாதேவி’ வெளியாகி ஒரு வாரம் கழித்து தான் தமிழ் ‘ருத்ரமா தேவி’ வெளிவரவிருக்கிறது. அதாவது வருகிற 16-ஆம் தேதி தான் தமிழ் ‘ருத்ரமா தேவி’ ரிலீசாகும். இதனை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;