‘பசங்க-2’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பசங்க-2’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 5-Oct-2015 12:15 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா நடிக்க, சூர்யா, அமலா பால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவையும், ‘பிசாசு’ படப் புகழ் அரோல் கொரேலி இசையமைப்பையும் கவனிக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘36 வயதினிலே’. இந்த படத்தை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘பசங்க-2; விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;