டி.வி.யை ஆக்ரமித்த அஜித், சூர்யா, பிரபாஸ்!

டி.வி.யை ஆக்ரமித்த அஜித், சூர்யா, பிரபாஸ்!

செய்திகள் 5-Oct-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

தொலைக்காட்சி நேயர்களுக்கு நேற்று மாலை சரியான விருந்து! ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி’, அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ சூர்யாவின் ‘மாஸ்’ என மூன்று பெரிய படங்கள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின! வசூலில் பெரும் சாதனை படைத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. இந்த படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்தின் அதிகாரபூர்வமான டிவிடி சமீபத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து இப்படத்தை பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமாவில் நேற்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது! அதைப் போல கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘எந்தவானி காடு’ பிரபல தெலுங்கு சேனலான மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதைப்போல வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படமும் மலையாள சேனலான சூர்யா சேனலில் நேற்று மாலை ஒளிபரப்பப்பட்டது. இப்படி மூன்று பிரபல நடிகர்கள் நடித்த 3 படங்கள் ஒரே நாளில் டிவியில் ஒளிபரப்பானது ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமைந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;