அக்டோபர் 8ல் களமிறங்குகிறதா ‘வேதாளம்’?

அக்டோபர் 8ல் களமிறங்குகிறதா ‘வேதாளம்’?

செய்திகள் 5-Oct-2015 10:25 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் ‘புலி’ படம் வெளியான அதே அக்டோபர் 1ஆம் தேதியன்றே அஜித்தின் ‘வேதாளம்’ பட டீஸரும் வெளிவரும் என பெரும் எதிர்பார்ப்பிலிருந்தனர் அஜித் ரசிகர்கள். போதாக்குறைக்கு கவிஞர் மதன் கார்க்கி வேறு... ‘டீஸரைப் பார்த்து வியந்து போனேன். இன்று இரவு வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட்டை ஒன்றைத் தட்ட, ட்விட்டரில் வேதாளம் டிரென்டில் ஏறியது. ஆனால், சிற்சில காரணங்களால் கடைசி நேரத்தில் டீஸர் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வியாழன்று அதாவது அக்டோபர் 8ஆம் தேதி ‘வேதாளம்’ டீஸர் கண்டிப்பாக வெளியாகும் என மீண்டும் ட்விட்டரில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், வேதாளத்தின் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக இதுபோன்ற தகவல்கள் வாரவாரம் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;