ராணி முகர்ஜி ஸ்டைலில் அதிரடி போலீஸாகும் சிம்ரன்!

ராணி முகர்ஜி ஸ்டைலில் அதிரடி போலீஸாகும் சிம்ரன்!

செய்திகள் 5-Oct-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆஹா கல்யாணம்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கிய நடிகை சிம்ரன், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் இளசுகளின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். இதுதவிர ஜெகதீஷ்குமார் இயக்கத்தில் ‘கரையோரம்’ எனும் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் தோன்றியிருக்கிறார் சிம்ரன்.

இதற்கிடையே தனது கணவர் தீபக்கின் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சிம்ரன். விளம்பரப் படங்களை இயக்கி வந்த கௌரி சங்கர் இப்படத்தின் மூலம் சினிமா இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். ‘மர்தாணி’ எனும் பாலிவுட் படத்தில் நடிகை ராணி முகர்ஜி ஏற்றிருந்த அதிரடி போலீஸ் அதிகாரி போன்ற வேடத்தில்தான் இந்த புதிய படத்தில் நடிக்கிறாராம் சிம்ரன். வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமில்லாமல், சில சயின்ஸ் ஃபிக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம். பவர்ஃபுல் வில்லன் ஒருவருக்கான தேடல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படம் நவம்பரில் படப்பிடிப்பைத் துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவியல் - டீசர்


;