நடிகர் சங்க தேர்தல் – பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை!

நடிகர் சங்க தேர்தல் – பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை!

கட்டுரை 3-Oct-2015 2:59 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருட தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது! இப்போது நடிகர் சங்க தலைவராக இருக்கும் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் வேறு ஒரு அணியினரும் இந்த தேர்தலில் மோதுகின்றனர்.

சரத்குமார் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார் போட்டியிட, துணை தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டியிடுகிறார். பொது செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். விஷால் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று (2-10-15) விஷால் அணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும், தேர்தல்அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியும் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விஷால் அணியினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

# நீதிமன்றத்தில் சட்டசிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சங்க நிலத்தை மீட்டெடுப்போம்.

# செயற்குழு, பொதுக்குழுவின் ஒப்புதலோடு SPI ஒப்பந்தத்தை ரத்து செய்து, நமது சங்க நிலத்தை நமதாக்குவோம்.

# அறக்கட்டளையின் சட்டத்திற்கு புறம்பாக 2 பேர் மட்டுமே கொண்டு செயல்பட்ட அறக்கட்டளையை, சட்டப்படி மூத்த கலைஞர்களை கொண்டு 9 பேரை நியமிப்போம்.

# நமது சங்க நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட வெளிப்படையான அணுகுமுறையுடன் சிறப்புக் குழு அமைத்து விவாதிக்கப்படு முடிவுகள் எடுக்கப்படும்.

# கட்டிடம் கட்டுவதற்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் பொருளாதாரதை மேம்படுத்த பாண்டவர் அணி சார்பில் உடனடியாக ஒரு திரைப்படம் எடுத்து நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.

# இதுவரை கடந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட செலவுகளை மீண்டும் தணிக்கை செய்து தவறுகள் சீர் செய்யப்படும். அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

# மூத்த நாடக நடிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக உள்ள ரூபாயின் மூலம் வரும் வருமானத்தில் வழங்கப்படும்.

# வெளிமாநிலங்களில் உள்ள நடிகர் சங்கங்களில் உள்ள சிறப்பு திட்டங்களை கண்டறிந்து, நமது சங்கத்தில் அவைகள் செயல்படுத்துவோம்.

# நமது சங்க நிலத்தை அடமானம் வைக்காமலே மாதம் 30 லட்சத்திற்கு மேல் வருமானம் வருவதுபோல் திட்டங்கள் தீட்டப்படும்.

# நடிகர் சங்க நிலத்திற்காக முதலில் குரல் கொடுத்த திரு.பூச்சி முருகன், திரு.குமரிமுத்து, திரு. காஜா மைதீன், திரு.ஆர்.எம்.சுந்தரம் ஆகியோர் மேல் நடிகர் சங்கம் போட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.

# SRM நிறுவனர் திரு.பச்சமுத்து அவர்கள் மூலம் நமது உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் வாங்கி தரப்படும்.

# நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்களின் மேற்படிப்பிற்கான உதவிகளும் சங்கத்தின் மூலம் செய்து தரப்படும்.

இப்படி மேலும் பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;