சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 3-Oct-2015 11:11 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா தனது ‘24 AM STUDIOS’ என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இந்த படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை அனிருத்தும், ஒளிப்பதிவு பொறுப்பை பி.சி.ஸ்ரீராமும் மற்றும் சவுண்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும், கலை பொறுப்பை முத்துராஜும், பட தொகுப்பை ஆண்டனி எல்.ரூபனும் ஏற்றிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இயக்குனர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகாமல் இருந்தது. இப்போது கதாநாயகியும் முடிவாகி விட்டது. சிவகார்த்திகேயன் நடித்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கீர்த்தின் சுரேஷ் தான் இப்படத்திலும் கதாநாயகி! இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;