கேரளா, கர்நாகவிலும் கால் பதிக்கும் தனுஷ்!

கேரளா, கர்நாகவிலும் கால் பதிக்கும் தனுஷ்!

செய்திகள் 3-Oct-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்துள்ள படம் ‘நானும் ரௌடிதான்’. விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய்சேதுபதி, நயன்தாரா என இரண்டு பிரபலங்கள் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள படம், மற்றும் தனுஷ் தயாரித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிரபார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் தமிழக மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. விஜய் நடிப்பில் ‘கத்தி’ படத்தை தயாரித்த நிறுவனம் இது! இந்நிலையில் ‘நானும் ரௌடிதான்’ கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் தனுஷின் ‘வுண்டபார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே நேரடியாக விநியோகம் செய்யவிருக்கிறது. இதன் மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவில் முதன் முதலாக கால் பதிக்கவிருக்கிறது தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;