இன்று, சிவாஜி கணேசன் பிறந்த நாள்!

இன்று, சிவாஜி கணேசன் பிறந்த நாள்!

செய்திகள் 1-Oct-2015 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

இந்திய சினிமாவில் தலைச்சிறந்த நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்று (அக்டோபர்-1) அவர் பிறந்த நாள்! தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால உயிரூட்டியவர்! அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் இன்னமும் நம்முடைய நெஞ்சங்களில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சிவாஜி கணேசனின் 87-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று காலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அவரது மகன் பிரபு, பேரன் விக்ரம் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு, சென்னை மியூசிக் அகாடமியில் அவரது 87-ஆவது பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரும், புகழும் சினிமா இருக்கும் காலம் வரை நிலைத்து நிற்கும் என்பதில் எந்த ஐய்யவுமில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;