வேதாளம் டீஸர் இன்றிரவு வருமா? வராதா?

‘வேதாள’த்தை பார்த்து வியந்த மதன் கார்க்கி!

செய்திகள் 30-Sep-2015 1:14 PM IST VRC கருத்துக்கள்

நாளை வெளியாகும் ‘புலி’ படத்திற்காக விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் இன்று இரவு 12.01 மணிக்கு வெளியிடயிருப்பதாக செய்தி ஒன்று ட்விட்டரில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதற்குக் காரணம் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் ட்வீட்தான். வேதாளம் படத்தின் டீஸரைப் பார்த்து வியந்ததாகவும், இன்று இரவு டீஸர் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் செய்த ட்வீட்தான் அஜித் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

ஆனால், வேதாளம் டீஸர் இன்று இரவு வெளிவராது என இன்னொரு தகவலும் சுத்திக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமாக... விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதால், அதனைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ‘வேதாளம்’ டீஸரால் திசை திரும்பலாம் என்பதால், வேதாளம் டீஸர் வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, தேவையில்லாமல் விஜய், அஜித் ரசிகர்களிடையே ட்விட்டர் மோதல் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ‘வேதாளம்’ நள்ளிரவில் களமிறங்குமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;