ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

செய்திகள் 30-Sep-2015 12:27 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘24’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது என்று நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் போலவே சூர்யாவும், போலந்து நாட்டில் நடந்த இப்படத்தின் கடைசி இரண்டு பாடல் காட்சிகளில் மகிழ்ச்சியாக நடித்து முடித்தது குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், சமீபத்தில் தெலுங்கில் இயக்கிய ‘மனம்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கி வரும் ‘24’ தமிழில் அவரது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.





உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;