டிசம்பரில் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!

டிசம்பரில் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!

செய்திகள் 30-Sep-2015 11:44 AM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கெத்து’ படத்தின் படப்பிடிப்பு 3 பாடல்கள் தவிர அனைத்தும் முடிந்து விட்டதாம்! இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் பங்கேற்கும் 3 பாடலை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் வெளிநாடு பயணமாக இருக்கிறார்கள் ‘கெத்து’ படக்குழுவினர்! திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு உதயநிதியின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைக்கிறார். பாடல்களின் படப்பிடிப்பு முடிந்ததும் விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதனை தொடர்ந்து ‘கெத்து’ படத்தை டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார் உதயநிதி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மொட்ட சிவா கெட்ட சிவா - டிரைலர்


;