கால்பந்தாட்ட விளம்பர தூதராக தனுஷ்!

கால்பந்தாட்ட  விளம்பர தூதராக தனுஷ்!

செய்திகள் 30-Sep-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகிற 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனுக்கான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் விளம்பர தூதராக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆட்டத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார். இது சம்பந்தமாக நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கூறும்போது,

‘‘ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கு நான் விளம்பர தூதரகாக நியமிக்கப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுவயது முதலே நான் கால்பந்து விளையாட்டு ரசிகன். என் வீட்டருகில் இருக்கிற தெருக்களில் எல்லாம் கால்பந்து விளையாடியிருக்கிறேன். 90 நிமிடங்கள் எல்லோரும் சேர்ந்து விறுவிறுப்பாக ஆடும் இந்த விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இப்போது கால்பந்து விளையாட்டு மீதும் மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் விஷயம்’’ என்ற தனுஷிடம்,

உங்களுக்கு மிகவும் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார் என்று கேட்டபோது. ‘மெர்சி’ என்று பதில் அளித்தார். அதனை தொடர்ந்து, ‘இந்திய அளவில் யார் மிகவும் பிடித்த கால்பந்தாட்ட வீர்ர் என்று கேட்டபோது, ‘‘அப்படி யாரும் இல்லை’ என்று அது குறித்து தெரியாத மாதிரி பதில் அளித்தார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;