கரு.பழனியப்பன் நடிக்கும் கள்ளன்!

கரு.பழனியப்பன் நடிக்கும் கள்ளன்!

செய்திகள் 30-Sep-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

‘மந்திரப் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் ‘கள்ளன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம், தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்தப் படத்தை சந்திரா இயக்குகிறார். இயக்குநர் அமீரின் 'ராம், ‘பருத்தி வீரன், இயக்குநர் ராமின் 'கற்றது தமிழ்' என தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் சந்திரா. 'கள்ளன்' படத்திற்காக சந்திரா தேர்ந்தெடுத்து இருக்கிற கதைக்களம் புதுசு.

‘‘விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படமே கள்ளன்’’ என்கிறார் இயக்குனர் சந்திரா. இப்படத்தின்
ஒளிப்பதிவு பொறுப்பை எம்.எஸ்.பிரபு கவனிக்கிறார். கே இசை அமைக்கிறார். பாடல்கள் நா.முத்துக்குமார் எழுதுகிறார். இந்த படத்தை ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

"ஐ" - ஹிந்தி டீசர்


;