ஐங்கரனிடம் பாலாவின் தாரை தப்பட்டை!

ஐங்கரனிடம் பாலாவின் தாரை தப்பட்டை!

செய்திகள் 29-Sep-2015 2:29 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேர்கடர்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயரிக்கிறது. ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கும் படம் இது என்பதோடு, சசிகுமார் நடிக்கும் படம், இளையராஜா இசை அமைக்கும் ஆயிரமாவது படம் என்று பல சிறப்புக்களுடன் உருவாகும் படம் இது என்பதால் ‘தாரை தப்பட்டை’ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தயாரிப்பில் பங்கு வகித்த ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘தாரை தப்பட்டை’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;